பப்பாளி


சிற்றுண்டிக் கடை நடத்தும் ஒரு இளைஞன் எப்படி ஐ.ஏ.எஸ். ஆகிறான் என்பதைச் சொல்கிறது பப்பாளி. நாயகனாக 'சரவணன் மீனாட்சி' டி.வி. தொடரின் செந்தில் நடிக்கிறார். நாயகியாக இஷாரா அறிமுகம் ஆகிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில், நிரோஷா ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறாராம். முக்கிய நடிகர்கள் பிற வேடங்களில் நடிக்கின்றனர். கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற படங்களை இயக்கிய மூர்த்தி 'கோவிந்த மூர்த்தி' என்ற பெயரில் இப்படத்தை இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com