கவாத்து


காவல்துறை பயிற்சியில் ஒன்று கவாத்துப் பயிற்சி. கவாத்து என்றால் களையெடுப்பது என்பது பொருள். சரியாகப் பயிற்சி பெறாத காவலர்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக பிரிட்டிஷ்காரர்கள் கண்டுபிடித்த இந்த கவாத்தையே படத்தின் தலைப்பாக்கி விட்டார் ஜி.வி. பாலா. விதார்த் மற்றும் நித்திஷ் நாயகர்களாக நடிக்க, ரியா நாயகியாக அறிமுகமாகிறார். நாட்டில் அக்கிரமும், அநியாயமும் செய்யும் அயோக்யர்களை நாயகன் களையெடுப்பதால் படத்திற்கு இந்தப் பெயராம். இசை: சபேஷ்-முரளி.

அரவிந்த்

© TamilOnline.com