குக்கூ


பிரபல எழுத்தாளரும், இயக்குநர் லிங்குசாமியின் உதவி இயக்குநருமான ராஜு முருகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் குக்கூ. அட்டகத்தி தினேஷ் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை மாளவிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் இயக்குநர் ஈ. ராமதாஸ், முருகதாஸ், சோமசுந்தரம் உட்படப் பலர் நடிக்கின்றனர். இசை : சந்தோஷ் நாராயணன். நாம் அன்றாடம் சந்திக்கும் ஆனால் கவனிக்கப்படாத எளிய மனிதர்களின் காதல், அன்பு, சோகம் போன்ற உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி வருகிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com