மூன்று வேடங்களில் பிரசாந்த்!
முதன்முதலாக மூன்று மாறுபட்ட வேடங்களில் பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது எஸ்.கே. ·பிரேம்ஸ் அன்ட் ராஜலட்சுமி கலைக்கூடம்.

'ஜாம்பவான்' என்கிற பெயரில் உருவாகும் இப்படத்தில் பிரசாந்துக்கு நாயகியாக நடிக்கிறார்கள் நிலா மற்றும் மேக்னா நாயுடு. இப்படத்திற்காகத் தலை அலங்காரங்களிலும், உடைகளிலும் புதுமை காட்ட உள்ளார் பிரசாந்த். இதற்காகச் சிறப்பு உடல் பயிற்சி நிபுணர்கள் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இசை பரத்வாஜ், ஒளிப்பதிவு ரமேஷ்பாபு. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தைக் கவனிக்கிறார் நந்தகுமார்.

இதில் முக்கியமான வேடமொன்றில் நடிக்கவிருக்கிறார் கர்நாடக இசைக் கலைஞர் மதுரை டி.என்.சேஷகோபாலன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com