வாராயோ வெண்ணிலாவே


'சென்னை-28' படத்திற்கு திரைக்கதை எழுதி வசன உதவியாளராகப் பணியாற்றிய ஆர். சசிதரன் இயக்கும் படம், 'வாராயோ வெண்ணிலாவே.' தினேஷ், நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹரிப்ரியா மற்றும் காவ்யா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இசை: கார்த்திக் ராஜா. பணக்கார இளைஞராக வரும் நாயகன், சென்னையிலிருந்து கேரளாவுக்கு வேலைசெய்யச் செல்கிறார். சென்ற இடத்தில் ஒரு அழகான பெண்மீது காதலாகிறார். அதன் விளைவு என்ன என்பதைத் திடீர் திருப்பங்களுடன் சொல்ல வருகிறது 'வாராயோ வெண்ணிலாவே'

அரவிந்த்

© TamilOnline.com