மன்னார் வளைகுடா


நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு கதாநாயகனாக நடிக்கும் படம் 'மன்னார் வளைகுடா'. இதில் நாயகியாக காவேரி நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜெர்ஸி பேக்ஸ் ஆலன் நடித்துள்ளார். இவர்களுடன் நாயகிகளாக ஜெர்மனியைச் சேர்ந்த சந்திரா லூயிஸா, அமெரிக்காவைச் சேர்ந்த அமி மகேந்திரா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். கடல்சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனைகளையும், மீனவர்களது அவலங்களையும் விளைநிலங்கள் பிளாட்களாவதன் வேதனைகளையும் சொல்ல வருகிறது இப்படம். எழுதி இயக்குகிறார், புதுமுக இயக்குநர் தனசேகர். இவர் இயக்குநர் ஆர். மாதேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இசை: எஸ்.சிவப்பிரகாசம்

அரவிந்த்

© TamilOnline.com