ஜூலை 2013: வாசகர் கடிதம்
அம்மாவுக்குத் தெரியாமல் சிறுகதை ஜோர். நாம் செய்யும் எந்த செயலும் குழந்தைகளுக்கு உடனே மனதில் பதிந்துவிடுகிறது. நாம் உண்மையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

கௌசல்யா சுவாமிநாதன்,
ப்ளெசண்டன், கலிஃபோர்னியா.

*****


ஜூன் தென்றல் இதழில், அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய 'மிடுக்கு', சீனாவை ஏன் உணவுப் பொருட்களுக்கு தாங்கி நிற்க வேண்டும் என்ற பொருளாதார 'கொடுக்கு', சீனத்தின் பொருளாதாரக் கலப்படத்திற்கு அமெரிக்கா ஏன் 'தடுக்கு' இடுகிறது என்ற ஐயப்பாடு போன்ற அடுக்கடுக்கான வினாவைத் தொடுத்து புருவத்தை உயர்த்த வைத்தது தலையங்கம்.

கனடாவில் வன்னி வீதி! அடடா, வீதி சமைத்த கனடிய மக்களைப் புகழ்வதா, அங்கு வசிக்கும் பல்லின சமூகத்தாரைப் புகழ்வதா, பெயர் வைக்க இசைந்த நகரசபை அதிகாரிகளைப் பாராட்டுவதா, நகரசபை உறுப்பினர் லோகன் கணபதியின் தன்னலமற்ற தொண்டைப் பாராட்டுவதா - புரியாமல் மகிழ்ச்சியில் திகைக்கிறோம். செய்தியை வெளியிட்ட தென்றலைப் பாராட்டுகிறேன்.

தளவாய் நாராயணசாமி,
பெங்களூர்© TamilOnline.com