தலைவா
துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் தலைவா. இப்படத்தில் விஜய் மும்பை தாதாவாக நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம். "1980களில் மும்பையைக் கலக்கிய வரதராஜ முதலியாரை பிரதிபலிப்பது போன்று விஜய்யின் கேரக்டர் இருக்கும். விஜய்யை இதுவரை பார்க்காத தோற்றத்தில் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் வெள்ளை உடையைத் தேர்வு செய்தேன். 'தலைவா தலைவா சரித்திரம் எழுது' என்கிற பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். சின்னி பிரகாஷ் நடனம் அமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு விஜய்யுடன் 500 நடனக் கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். இது விஜய்க்கு மிக வித்தியாமான ஒரு படம்" என்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.அரவிந்த்

© TamilOnline.com