பிரித்து நடப்பெற்ற கன்று
மேல்தளத்துக்குப் போக
மறுக்கிறாள் தாய்!

பள்ளியிலேயே
முதல் மதிப்பெண்.
டியூக் பல்கலைக்கழகத்தில்
கட்டணக் குறைப்புடன் படிப்பு.

அப்பாவுக்குப் பெருமை
அம்மாவுக்கு அழுகை.

மூடியேயிருக்கிறதாம் அறை
பிரித்து நடப்பெற்றது கன்று!

பழமைபேசி,
சென்டர்வில், டென்னசி

© TamilOnline.com