முளைப்பயறில் மூணு தினுசு
எல்லாரும் ஸ்ப்ரௌட்டுன்னு சொல்றாங்களே அந்த முளைவிட்ட பயறுல ஏகப்பட்ட சத்துக்களும் விடமின்களும் உண்டு. என்ன, சாப்பிடத்தான் கொஞ்சம் சிரமப்படும். ஏன் சிரமப்படணும், அதையும் சுவையா சமைக்கலாமே அப்படீங்கறாங்க லதா சந்திரமௌளி. எப்படின்னு பார்க்கலாமா?

முளைப்பயறு சாலட்

தேவையான பொருட்கள்
முளைப்பயறு - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய
வெங்காயம்–1/2 கிண்ணம்
விதைநீக்கிய தக்காளி - 1/2 கிண்ணம்
குடைமிளகாய் - 1/2 கிண்ணம்
பன்னீர் -- 1/4 கிண்ணம்
கொத்துமல்லி - 1/4 கிண்ணம்
துருவிய காரட் - 1/4 கிண்ணம்
எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை :
தக்காளி, கொத்துமல்லி தவிர, மற்ற எல்லா சாமான்களையும், ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும். இதில், தக்காளி மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

லதா சந்திரமௌளி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

© TamilOnline.com