மெம்ஃபிஸ்: ஒய்.ஜி.மகேந்திரனுக்குப் பாராட்டு
தமிழ்த் திரை மற்றும் நாடக உலகுகளில் 50 ஆண்டுளுக்கு மேலாகச் சேவை புரிந்துவரும் நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா அவர்களுக்கு, டென்னசி மாநிலத்திலுள்ள ஷெல்பி கவுண்டியின் மேயர் மேதகு மார்க் லட்ரெல் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்தார். உலகத்தின் மிகப்பெரிய நகர்ப்புற விவசாயப் பண்ணையான ஷெல்பி வட்டத்தைச் சேர்ந்த ஷெல்பி இண்டர்நேஷனலின் தலைவர் ஜான் வில்சன், மகேந்திரனை, மெம்ஃபிஸ் செயின்ட் ஜூட்ஸ் நிறுவனரும், ஹாலிவுட் நடிகருமான டானி தாமஸுடன் ஒப்பிட்டுப் புகழ்ந்ததுடன் நடிகர் மகேந்திரனின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டார்.

முரளி ராகவ்,
மெம்ஃபிஸ்

© TamilOnline.com