மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
2013 மே 24 முதல், மே 31ம் தேதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமாக விளங்கும் அம்மா தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து அளவற்ற அன்பை வழங்கினார்.

"கண்களை மூடி அமர்ந்திருப்பது மட்டுமே தியானம் என்று கருத வேண்டாம். புன்னகை தவழும் முகம், நல்ல வார்ததை, கருணை நிறைந்த பார்வை போன்றவையும் தியானமே ஆகும். தியானத்தின் மூலம் நம் இதயத்தில் கருணை நிறைய வேண்டும். அப்போதுதான் இறைவனின் பிரகாசத்தை நமது இதயத்தில் தரிசிக்க முடியும். பிறரது துன்பங்களை அறிந்து, அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கும் மனோபாவம் நமக்கு வேண்டும்," என்கிறார் அம்மா. ஜூன், ஜூலை மாதத்தில் அம்மா வருகைதர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி05.30 - 06.08
லாஸ் ஏஞ்சலஸ்06.10 - 06.14
ஆல்பகர்க்கி 06.17 - 06.20
டாலஸ் 06.22 - 06.23
அயோவா 06.25 - 06.26
டொரன்டோ, கனடா06.28 - 07.01
சிகாகோ 07.03 - 07.05
வாஷிங்டன் டி.சி.07.07 - 07.08
நியூ யார்க்07.11 - 07.13
பாஸ்டன் 07.15 - 07.18


இலவச பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் குறித்து அறிய: www.amritapuri.org/activity
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com