துருவ நட்சத்திரம்


சூர்யா நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'துருவ நட்சத்திரம்'. இருவரும் இணைந்து 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' ஆகிய வெற்றிப் படங்களைத் தந்துள்ளனர். பாடல்களை மதன்கார்க்கி எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிரியா ஆனந்த் அல்லது சமீரா ரெட்டி நாயகி. முக்கிய வேடத்தில் பார்த்திபன், சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது சிங்கம் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அதை முடித்ததும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். கௌதம் மேனனின் வழக்கமான பாணியில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது 'துருவ நட்சத்திரம்'.

அரவிந்த்

© TamilOnline.com