ஐந்து ஐந்து ஐந்து
பரத் மூன்று வித்தியாசமான மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் படம் ஐந்து ஐந்து ஐந்து. இதுவரை 'ரோஜா கூட்டம்', 'சொல்லாமலே', 'பூ' போன்ற மெல்லிய காதல் படங்களையே இயக்கிவந்த சசி இப்படத்தில் ஆக்‌ஷன் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். எ‌ரிகா ஃபெர்னான்டஸ், மிர்திகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். சந்தானம், சுதேஷ்பொரி, ராஜ்பரத், ரத்னவேலு, மனோபாலா, லட்சுமி முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். இசை: சைமன். வேறெந்தப் படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார் பரத்.



அரவிந்த்

© TamilOnline.com