ஏழை மாணவர் கல்விக்கு உதவ
சென்னை மைலாப்பூரிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் 1905ம் ஆண்டிலிருந்து ஆதரவற்ற மாணவர்களுக்குத் தங்குமிடம், உணவு, உடை, உயர்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்வி ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. தற்போது இதில் 670 மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். பாலிடெக்னிக் கல்வியின் வாகனப் பொறியியல், கணினிப் பொறியியல் ஆகியவற்றுக்கு அரசு மான்யம் கிடையாது என்பதால் இவற்றில் பயிலும் 272 மாணவர்களுக்குக் கல்லூரி மற்றும் ஹாஸ்டல் செலவுகளை ஏற்க வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதற்கான செலவு மட்டுமே 13.30 மில்லியன் ரூபாய் ஆகும். விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, 170 மில்லியன் ரூபாய் வைப்புநிதி ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். ஏதிலி ஏழை மாணவர்க்கு உதவ விரும்புவோர் American Service to India (ASTI) அமைப்பின் மூலம் செலுத்தலாம். இது 501(c)(3) பதிவு பெற்ற லாபநோக்கற்ற அமைப்பென்பதால், நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு.

உதவ விரும்புவோர் asti1.org என்ற வலைப்பக்கத்தில் Tamil Nadu மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, பட்டியலில் 'Ramakrishna Mission Students' Home எனத் தேர்வு செய்து செலுத்த வேண்டும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com