சின்மயா மிஷன்: மஹா சிவராத்திரி
மார்ச் 10, 2013 அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா, சிவபெருமானின் பெருமைகளை நாடகமாகக் கிளேட்டன் கவுன்டி ஆர்ட்ஸ் மையத்தில் மேடையேற்றினார்கள். ஆறு காட்சிகளாகச் சிவனின் பெருமைகளை வழங்கிய இந்த நாடகத்தை ஷ்யாம் எல்லம்ராஜூ இயக்கியிருந்தார். 29 கதாபாத்திரங்கள், 40 தன்னார்வத் தொண்டர்களின் அயராத பங்களிப்பால் நாடகம் நடந்தேறியது. மூன்று அடுக்கு நாடகமேடை, துல்லியமான ஒளி, ஒலி அமைப்பு, அழகிய திரைச்சீலைகள், சிறப்பு விளைவுகள் என நாடகத் தயாரிப்பு கண்டோரை மெய்மறக்க வைத்தது. முத்தாய்ப்பாக, சிவன் வெட்டியானாக ஆதிசங்கரரின் முன் தோன்றி, தீண்டாமை இருளகற்றி, வேதங்களின் மகிமையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல, நாடகம் இனிதே நிறைவுற்றது.

வேணுகோபால் ராஜா,
ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com