பச்சை மண்
வீட்டின் பின்புறம்
ஓக் மரங்களுக்கடியில்
ஓடிப் பிடித்து
விளையாடிக் கொண்டிருக்கும்
மர அணில்களின்
குதூகலக் களிப்பில்
தானும் ஒன்றிப் போய்
கண்டு கொண்டிருந்தவள்
என்னைப் பார்த்ததும்
பதிலளிக்கிறாள்
கேட்கப்படாத கேள்விக்கு!

உங்க கவட்டி வில்லை
நான் ட்ரேஷ்ல போடலைப்பா
யார் போட்டங்கன்னும் தெரியலை!!

பழமைபேசி,
கோலியர்வில், டென்னசி

© TamilOnline.com