உறவு மரங்கள்
தமிழாசிரியர் செல்வன் ஐயா
பாட்டு கிளாஸ் சுசீலா மாமி
டேன்ஸ் கிளாஸ் சுமித்ரா டீச்சர்

தியானா அப்பா கல்யாண் மாமா
கீர்த்தி அப்பா விஜய் சித்தப்பா
மளிகைக் கடை இர்ஃபான் மாமா
சர்ச்ஸ்கூல் ஹெண்டர்சன் மிஸ்

பக்கத்து வீட்டு ஹெதர் ஆண்ட்டி
ஸ்விம்மிங்பூல் ஜான் வைடு
பால்குடி வாசன் மாமா
சார்லட் பிரியாக்கா

டாலஸ் குடுகுடுப்பையார்
நாஞ்சில் பீற்றர் தாத்தா
சைதன்யா வீட்டுப் பாட்டி
லைப்ரரில மேரி மேடம்

எல்லார்க்கும் சொல்லிடுங்க
எங்க வீட்டு பாப்பாவுக்கு
கை முறிஞ்சிடிச்சின்னு.

சொந்தக்காரங்க எல்லாம்
வந்து பார்த்திட்டுப் போகட்டும்!

அமெரிக்காவெங்கும்
அங்கிங்கெனாதபடிக்கு
வேர் பாய்ச்சி கிளை பரப்பி
துளிர்த்து நிற்கின்றன
உறவு மரங்கள்!

பழமைபேசி,
கோலியர்வில், டென்னசி

© TamilOnline.com