கோமாலினி


நாயகன், நாயகி, கதை என்று இல்லாமல் புதுமையான முறையில் உருவாகி வருகிறது 'கோமாலினி'. (பேரே புதுமைதாங்க!) வசனகர்த்தா இல்லாமல், படப்பிடிப்பு சாதனங்கள் எனத் தனியாக எதையும் பயன்படுத்தாமல் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இயல்பான சூழல்களில் உள்ளவர்களை அவர்களுக்கே தெரியாமல் மறைத்து வைத்த கேமராவால் படம் பிடித்து அதைத் தொகுத்துப் படமாக்கியுள்ளனர். படத்தின் இயக்குநர் திருநாவுக்கரசு, "இறந்து போனவர்களின் ஆவிகளுக்கும் இப்படத்தில் முக்கியப் பங்கு அளித்துள்ளோம். காட்டில் வாழும் சித்தர்கள், யோகிகள், மந்திரவாதிகளின் வாழ்க்கையையும் படம் பிடித்துள்ளோம். ஏறக்குறைய ஒரு வருடமாகப் படமாக்கி இருக்கிறோம்" என்கிறார். உலகில் Hidden camera மூலம் உருவாகும் முதல் படம் இதுதானாம். இசை: வேத சங்கர்.

அரவிந்த்

© TamilOnline.com