கல்யாண சமையல் சாதம்


திருமணமாகி நீண்ட இடைவெளிக்குப் பின் பிரசன்னா நடிக்கும் படம் 'கல்யாண சமையல் சாதம்'. முழுக்க நகைச்சுவையாக உருவாகி வரும் இப்படத்தைத் தயாரிப்பவர் தென்றல் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான அருண் வைத்தியநாதன். பல்வேறு குறும்படங்களை இயக்கி அனுபவம் பெற்றிருக்கும் ஆர் எஸ் பிரசன்னா படத்தை இயக்குகிறார். பிரசன்னாவுடன் நாயகியாக நடிப்பவர் சிநேகா... இல்லை.... லேகா வாஷிங்டன். முக்கிய வேடங்களில் டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு திருமணம், அதைச் சுற்றி நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்களைச் சுற்றி இப்படம் உருவாகிறது.

அரவிந்த்

© TamilOnline.com