திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் 'உ'. இதில் நாயகனாக தம்பி ராமையா நடிக்கிறார். படத்தில் நாயகி என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி யாரும் இல்லை (அடடா...). தம்பி ராமையாவுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அதை அவர் சரியாகப் பயன்படுத்தினால் கோடீஸ்வரனாகலாம். ஆனால் அவர் ஒருவரால் மட்டும் அதைச் செய்ய முடியாது. அதனால் நான்கைந்து இளைஞர்களைச் சேர்த்துக்கொள்கிறார். அவர்களோ ராமையாவை ஏமாற்றி அந்தப் பணத்தைச் சுட்டுவிட நினைக்கிறார்கள். வெற்றி பெறுவது யார் என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்ல வருகிறது 'உ'. ஆஷிக் இயக்கத்தில், அபிஜித் ராமசாமி இசையமைக்கிறார். பாடல்கள் முருகன் மந்திரம். 'உச்' கொட்ட வைக்காமல் இருந்தால் சரி!

அரவிந்த்

© TamilOnline.com