சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
ஜனவரி 14, 2006 அன்று கலி·போர்னியா சிமி பள்ளத்தாக்கின் இல்லம் ஒன்றில் பிரபல சிவகங்கை எம். மோஹன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பிரசித்தி
பெற்ற இவருடைய இன்னிசை நிகழ்ச்சி தியாகராஜர், புரந்தர தாசர், தீட்சிதர் ஆகியோரின் கிருதிகளைக் கொண்டதாக இருந்தது.

தியாகய்யரின் நேரடிச் சீடரான தில்லை ஸ்தானம் ராம ஐயங்கார் அவர்களது பிரதான சிஷ்யர் நிஷாந்த் சந்திரன் வயலின் வாசிக்க, பூவலூர் சீனிவாசன் அவர்களது சிஷ்யை சுபா சந்திரமெளலியின் மிருதங்கத் துடன் கச்சேரி இனிது நடந்தேறியது.

பிரமிளா நாராயணன்

© TamilOnline.com