ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம்
அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகம் (American Tamil Medical Association-ATMA) 2005ம் ஆண்டில், அமெரிக்காவாழ் தமிழ் மருத்துவர்கள், சுகாதாரத் துறையில் பணிசெய்யும் தமிழர்கள் ஆகியோரை இணைக்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் அமெரிக்காவிலும் தமிழகத்திலும் சர்வதேச அளவில் சேவை புரிந்து வருகிறார்கள். 'ஆத்மா'வின் 2013ம் ஆண்டுக்கான ஜார்ஜியா மாநிலத்தின் புதிய ஆளுநராக அட்லாண்டாவைச் சேர்ந்த டாக்டர். கலை செல்லம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தலைவர் டாக்டர். பாலுமணி, முந்தைய ஆண்டின்ஆளுநரான டாக்டர். மகிழ்னன் இருவரும் அறிவித்தார்கள். டாக்டர். கார்த்தி சுப்பண்ணன் செயலாளராகவும், காயத்ரி இந்திரகிருஷ்ணன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உமா பாபா,
ஜார்ஜியா

© TamilOnline.com