கபடம்


பிரபல இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜோதிமுருகன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் கபடம். புதுமுகங்கள் சச்சின், அங்கனாராவ் நாயக, நாயகியாக நடிக்கின்றனர். உடன் சந்தோஷ், காதல் சரவணன், ஹனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மாறுபட்ட, எதிரும் புதிருமான குணாதிசயங்கள் கொண்ட இருவர் திருமணம் செய்துகொள்ள நேர்கிறது. போதாதா தலைவலிக்கு! (அந்தப் பாப்பா தன் பிரச்சனைகளை டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரனுக்கு எளுதிச்சான்னு தெரியல!) அவர்கள் குடும்ப வாழ்க்கை என்ன ஆகிறது என்பதைச் சொல்ல வருகிறது கபடம். இசை: சதீஷ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com