மூன்று பேர் மூன்று காதல்


இயக்குனர் வசந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் மூன்று பேர் மூன்று காதல். இதில் அர்ஜுன், சேரன், விமல் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, பானு கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ருதி, சுர்வீனின் ஆகிய இரண்டு மும்பை மாடல்கள் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: யுவன் ஷங்கர் ராஜா. குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று நிலப்பரப்புகளில் நடக்கும் மூன்று கதைகள் கொண்ட படமாம் இது.

அரவிந்த்

© TamilOnline.com