அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு
நவம்பர் 24ம் தேதி தொடங்கி நன்றியறிதலின் நாட்கள் முடிந்தவுடன் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாலை நேரத்தில் வீடுவீடாகப் போய் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் கிறிஸ்துமஸ் துதிப்பாடல்களைப் (Christmas Carols) பாடி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்திகளைக் கூறி வருகிறார்கள். அட்லாண்டா பெருநகரில் வசிக்கும் தமிழர்கள் தமது இல்லங்களுக்கு இவர்களை அழைக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி இறுதியில் தரப்பட்டுள்ளது.

சபையின் ஞாயிறு பள்ளி மாணவ மாணவியரின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்பொருட்டு ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியைகளும் தயாரித்து இயக்கும் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ((Youth & Children Christmas Service) டிசம்பர் 9ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடைபெறும். முடிவில் கிறிஸ்துமஸ் தாத்தா வெகுமதிகள் அளிப்பார். ஸ்பானிஷ், நேப்பாளி, நைஜீரியன், ஆஃப்ரிக்கான்ஸ், சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடல் நிகழ்ச்சி டிசம்பர் 15ம் தேதி சனிக்கிழமை மாலை 6:00மணிக்கு நடைபெறும். குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service) நிகழ்ச்சி டிசம்பர் 23ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு சபை தேவாலயத்தில் நடைபெறும்.

நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி செவ்வாய் காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும். அதில் போதகர் பால்மர் பரமதாஸ் விசேச செய்தி அளிப்பார். பாடல்குழுவினர் சிறப்புப் பாடல்களைப் பாடுவார்கள். மதியம் நல்ல கிறிஸ்துமஸ் பல்சுவை விருந்து வழங்கப்படும்.

புதுவருடத்தை ஆலயத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் மாதம் 31ம் தேதி திங்கள் இரவு 10:30மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watchnight Service) நடைபெறும். கடந்த வருடம் பூராவும் காத்த இறைவனுக்கு வருடக் கடைசியில் நன்றி செலுத்திப் புது வருடத்தை தேவனுடைய சந்நிதியில் தொடங்குவதே இந்த ஆராதனையின் நோக்கம்.

2013ம் வருடத்தின் முதல் நாள் ஜனவரி 1ம் தேதி ஞாயிறு ஆராதனை காலை 10 மணிக்கு ஆலயத்தில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு: www.atlantatamilchurch.org
துதிப்பாடல் குழுவை உங்கள் இல்லத்துக்கு அழைக்கவும், பிறமொழிப் பாடல் மற்றும் குடும்பப் பாடல் ஆராதனையில் பங்கேற்றுப் பாடவும் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் போதகரைத் தொடர்புகொள்க: pastor@atlantatamilchurch.org

போதகர் பால்மர் பரமதாஸ், அட்லாண்டா

© TamilOnline.com