துட்டு


கந்து வட்டியின் கொடுமையைச் சொல்ல வரும் படம் 'துட்டு'. ஆர்யன் ராஜேஷ் நாயகனாக நடிக்க, மும்பையைச் சேர்ந்த சோனா சோப்ரா நாயகியாக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்து எடுக்கப்படும் படம் இது. சீதா, கோட்டா சீனிவாசராவ், கஞ்சா கருப்பு, மனோபாலா, டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை வசனம், பாடல்களை எழுதி, இசையமைத்து இயக்குபவர் முரளி கிருஷ்ணா. இவர் 'பார்வை ஒன்றே போதுமே', 'பேசாத கண்ணும் பேசுமே', 'பலம்' போன்ற படங்களை இயக்கியவர். பல மேடை நாடகங்களில் நடித்த கோபால்ஜி இப்படத்தைத் தயாரிப்பதுடன், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com