இந்திய மொழிச் சேனல்களைத் தரும் YuppTV
இந்திய மொழி சேனல்களை வழங்கும் முன்னணித் தளங்களில் ஒன்று YuppTV. அட்லாண்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு 2006ல் தொடங்கப்பட்ட குளோபல் டேக் ஆஃப் நிறுவனம் இயங்கி வருகிறது. புலம்பெயர்ந்த இந்தியர்கள் உலகெங்கிலுமிருந்து இந்திய மொழி நிகழ்ச்சிகளை இணைய வசதியுள்ள சாதனங்களில் யப்டிவி மூலம் பார்க்க முடியும். இதுவரை நேரலை (Live TV) மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் வசதிகளை ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் வசதியுள்ள சாதனங்களில் வழங்கிவந்த இந்நிறுவனம் கூடுதலாக 119க்கும் மேற்பட்ட அலைவரிசைகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் தொலைக்காட்சிச் சேனல்களை இணைய வசதியுள்ள டி.வி. பெட்டிகள், கணினிகள், ஐஃபோன், ஐபாட், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன்கள் ஆகியவற்றில் காணமுடியும்.

"ஆரம்பத்தில் மேற்குக்கரை மாகாணங்களில் இதை வழங்கிவந்த நாங்கள் தற்சமயம் அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கும் விரிவாக்கம் செய்துள்ளோம்" என்கிறார் இதன் நிறுவனர் மற்றும் முதன்மை அதிகாரி உதய் ரெட்டி. யப்டிவி ஹிந்தி, மராட்டி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. ஏற்கனவே ஒரு லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

120க்கும் மேற்பட்ட இந்திய சேனல்களிலிருந்து விரும்பியவற்றைத் தேர்வு செய்யலாம். குறைந்தபட்சக் கட்டணம் $9.99.

தொடர்பு கொள்ள:
தொலைபேசி - 1866-663-7557 (கட்டணமின்றி)
வலையகம்: www.yupptv.com

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com