டிசம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
3. தேவை அதிகமாகத் தொடங்கியதும் கட்டுப்படுத்துதல் (5)
6. அரசர் பிச்சை எடுக்க ஒரு கடலைத் துறந்து வாக்குவாதம் (4)
7. கடிதம் தன பரிவர்த்தனையால் கிடைப்பது எளிதல்ல (4)
8. கந்தரால் கபடன் சமுத்திரத்தை விழுங்கிக் குலுக்கிய சோழன் (6)
13. பயப்பட்ட நற்றமிழடுக்கு இடையொடியக் குலுங்கியது (6)
14. ஆர்வம் இடையிட ஊசி நடனமிடுபவள் (4)
15. பக்குவத்துடன் சொல்லாகத் தெரியும் (4)
16. ஆமாம் தடி தாண்டவத்தால் சுப முகூர்த்தம் இல்லாக் காலம் (2,3)

நெடுக்காக
1. பிஞ்சுமா உள்ளே சப்ப கட்டுக்குள் வா (5)
2. பொதுவிடம் வந்த தச்சன் தன்னை மறந்து முந்திக்குள் ஒளிந்தான் (5)
4. முதியவரா கன்னியிடம் பொற்காசை வைத்தார்? (4)
5. வயதானவர் தாவத் தாவ மயங்கிய கிரேக்க மாந்தர் (4)
9. அடிபட்டக் காயத்திற்கு போடப்படும் வரி? (3)
10. சொந்தமாக எழுதாமல் சேர்த்தது (5)
11. இரு ஸ்வரங்களைச் சேர்த்து ஒரு வெண்பா பாடி தினைப்புனம் காத்தவள்?(5)
12. குமார் வாடிக்கையாளர்களைப் பெற்ற வியாபாரத்தில் முனைப்புடையோர் (4)
13. நலிவுற்ற நதி சிந்தனை தினையை இழந்தது (4)

வாஞ்சிநாதன்

நவம்பர் 2012 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

© TamilOnline.com