அப்பா, மகன் கூட்டணி
சத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த 'வெற்றிவேல் சக்திவேல்' படத்தைத் தொடர்ந்து அப்பாவையும், மகனையும் நிறையத் தயாரிப்பாளர்கள் தேடி வருகின்றனர்.

இவர்களை வைத்து ஆலயம் படநிறுவனத்தின் சார்பில் எஸ்.ஸ்ரீராம் படம் ஒன்றைத் தயாரிக்கவிருக்கிறார்.

'மாமு' என்கிற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தில் சத்யராஜ் பணக்கார தாதாவாகவும், அவரது மகன் சிபி நடிகர் விஜய் ரசிகர்மன்றத் தலைவராகவும் கலக்குகிறார்கள்.

இசையை தேவா-ஸ்ரீகாந்த் அப்பா, மகன் கூட்டணி கவனிக்கிறது. வசனத்தை ஜி.கே. கோபி எழுத, கதை, திரைக்கதை, இயக்கத்தை செல்வா கவனித்துக் கொள்கிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com