பொங்கலுக்கு வந்த படங்கள்
தீபாவளிக்கே எதிர்பார்த்த விஜயகாந்தின் 'பேரரசு' படம் பொங்கல் வெளியீடானது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் நடித்த 'பரமசிவன்' திரைக்கு வர, சிம்புவின் 'சரவணன்', விஜய் நடிப்பில் 'ஆதி' என்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தன. இவற்றுக்கிடையில் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய 'பாசக்கிளிகள்' படமும் வெளிவந்தது.

'பேரரசு'வில் விஜயகாந்த் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ளார். அரசியல் பிரவேசத்திற்குப் பின் திரைக்கு வரும் முதல் படம். அஜித் லைலாவுடன் இணைந்து நடிக்கும் 'பரமசிவம்' அஜித் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்து எனலாம். இளம் நாயகன் சிம்புவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'சரவணா'வில் அவருடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் ஜோதிகா. ஷோபா சந்திரசேகரா தயாரிப்பில் உருவான 'ஆதி' தெலுங்கில் வெற்றிபெற்ற கதை. படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா. 'பாசக்கிளிகள்' பிரபுவின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. இப்படத்தில் கலைஞர் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார். வடிவேலுவிற்காக ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com