நிமிர்ந்து நில்


ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் 'நிமிர்ந்து நில்'. அமலா பால், மேக்னா ராஜ் நாயகிகளாக நடிக்கின்றனர். சமுத்திர கனி இயக்குகிறார். இசை: ஜி.வி. பிரகாஷ் குமார். ஒழுக்கம் தனக்குக் கற்பைப் போன்றது என்று வாழும் ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனின் வாழ்க்கையையும், அவன் அனுதினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பற்றிப் பேச வருகிறது இப்படம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு இரண்டு வேடமாம். இது ஒரு அதிரடி ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறது கோலிவுட் குருவி.

அரவிந்த்

© TamilOnline.com