மதகஜராஜா


கலகலப்பு படத்திற்குப் பின் சுந்தர்.சி இயக்கும் படம் மதகஜ ராஜா. விஷால் நாயகனாக நடிக்க, அஞ்சலி, வரலட்சுமி நாயகிகளாக நடிக்கின்றனர். உடன் பிரகாஷ்ராஜ், சந்தானம், நிதின் சத்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். கௌரவ வேடத்தில் ஆர்யா தோன்றுகிறார். விஷாலுக்கு இதில் இரட்டை வேடம் என்பது கொசுறு தகவல். முன்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்ட படமே தற்போது மதகஜராஜா ஆகியிருக்கிறது. இனிமேலும் பெயர் மாறலாம்!

அரவிந்த்

© TamilOnline.com