அக்டோபர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
சென்ற மாதம் வெளியான புதிரில் 'குந்தகம்' என்ற விடைக்கான குறிப்பில் அது 'தகுந்த' + 'ம்' என்று கூறியிருந்தேன். அதன்படி 'குந்ததம்' என்றுதான் வருகிறது. எனவே அதற்கு அது 'தகுந்த' குறிப்பல்ல. அதனால் குந்தகம் விளைந்து சிலர் பதில் அனுப்பாமல் இருந்திருக்கலாம். இத்தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக் காட்டிய (அபாகு) பார்த்தசாரதிக்கு நன்றி. குந்தகங் கொண்ட குறுக்கெழுத்தைத் தென்றலில் தந்ததென்றன் அற்பத் தவறு.

குறுக்காக:
3. ஸ்வரங்களின் எண்ணிக்கை முன்பு ஒரு ஸ்வரத்துடன் கடைசி ராகம் அமைதி அளிக்கும் (5)
6. கண் மூடிய காட்சியில் ஆயுதம் லேசானதில்லையோ? (4)
7. படம் வைத்து மாட்டப் பயன்படும் விதி (4)
8. மக்களாட்சிக்கு விரோதி சூழ்ச்சி செய்பவள் திருப்பியணிந்த வார் (6)
13. பணத்தை ஈட்டி நெஞ்சம் பாதித் துயரில் ஆழ்ந்துள்ளது (6)
14. உயர்வான சட்ட மன்ற உறுப்பினரே வேப்பிலையை அடி (4)
15. இணையற்ற சந்திரனில் படர்ந்த கரி (4)
16. கற்று பின்னர் வாழ் குளக்கரையில் பார்க்கலாம். (5)

நெடுக்காக:
1. நாரில் மல்லிகையை நினவுபடுத்தும் நட்பு (5)
2. குண்டு வைப்பவன் நெருப்பு வைக்க விதி வசம் சிக்கிய உப்புமாவுக்குத் தேவையானது (5)
4. தம்மை விட தஞ்சம் மாற இரு ஸ்வரங்களுடன் சுதந்திரமாகத் திரி (4)
5. குளிர்ச்சியான கடனை முதலில்லாமல் தந்தால் அபராதம் (4)
9. பாணபட்டரின் காவியத்தில் குதிரையில்லாமல் நீண்ட தூரம் (3)
10. ஆம், உள்ளே வாய் குளற கட்டுப்படுத்தும் போக்கு (5)
11. துமிலா, வெளியே கலப்பை வைத்திருந்தாலும் உடமையற்றவர்? (5)
12. ஒரு கையளவு விரல்கள் ஒவ்வொன்றும் பாதமாகும்போது (4)
13. நிலை குலைந்து தெருவுள்ளே நரி வால் நுழைந்தது (4)

வாஞ்சிநாதன்

செப்டம்பர் 2012 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

© TamilOnline.com