நாட்டிய நாடகம்: 'நயனி'
செப்டம்பர் 29, 2012 அன்று, ருக்மணி விஜயகுமார் தன் சக கலைஞர்களான பார்சுவ உபாத்யா, பவித்ரா பட், ஸ்ருதி கோபால், ஸூஹைல்பன், சுரபி எம். பரத்வாஜ் ஆகியோருடன் இணைந்து 'நயனி' என்ற நாட்டிய நாடகத்தை வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஸ்வாமி ஸ்ரீ தயானந்த சரஸ்வதி அவர்களின் 'Aim for SEVA' அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக சிகாகோவின் ஸ்கோகியிலுள்ள நார்த் ஷோர் சென்டரில் நடக்கவுள்ளது.

சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது உண்டான சாம்பலைத் தன் உடலெங்கும் பூசிக் கொண்டாராம். அதன் துகள் விழுந்த இடமெல்லாம் சிவலிங்கங்களாக மாறின. அதில் ஒன்றுதான் அமர கண்டக் எனும் காடுகள் அடர்ந்த பகுதி. பல ஆண்டுகளுக்குப் பின் அந்தக் காட்டில் வசித்த ஆதிவாசிகளின் பார்வையில் ஒரு பெண் குழந்தை தென்பட்டது. அவள்தான் நயனி. காலப்போக்கில் நயனியின் காதுகளில் 'ஓம்' என்ற ஒலி கேட்க, அந்தத் திசை நோக்கிச் சென்று அங்கே கண்ட சிவலிங்கத்தை அர்ச்சித்து வந்தாள். இது புரியாத பெற்றோர் அவளைத் தண்டிக்க எண்ணினர். சிவனைப் பூஜித்து அவரையே தேடிக் கொண்டிருந்த நயனி என்ன ஆனாள் என்பதை நாடகம் விவரிக்கிறது.

'Aim for SEVA' ஸ்ரீ தயானந்த சரஸ்வதி அவர்களால் 2000 ஆண்டில் இந்திய கிராமங்களில் ஏழைகள்/ஆதிவாசிச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது. இதுவரை 35000 சிறார்கள் பலன் அடைந்திருக்கிறார்கள். 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை ஆதிவாசிச் சிறுவரும் கல்வி பெற வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

நிகழ்ச்சி: 'நயனி'
நாள்: செப்டம்பர் 29, சனிக்கிழமை
இடம்: North Shore Center, Skokie, Chicago
மின்னஞ்சல் தொடர்புக்கு: nayanichicago@gmail.com

சிதம்பரராமன்,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com