மிச்சிகன்: பாரத சங்கீத உத்சவம்
2012 செப்டம்பர் 22, 23 தேதிகளில் மிச்சிகனிலுள்ள உலக இசை, நடனப் பள்ளி (The School of World Music & Dance) பாரத சங்கீத உத்சவம் ஒன்றை நோவை நடுநிலைப் பள்ளி, நோவை, மிச்சிகனில் நடத்த இருக்கிறது.

22ம் தேதியன்று 'சன்ஸ்கிருதி 2012' என்ற கருத்திலான முதல்நாள் நிகழ்ச்சிகளில் இடம்பெறுபவை: கர்நாடிகா சகோதரர்கள், சசிகிரண் மற்றும் சித்ரவீணை கணேஷ் ஆகியோர் வழங்கும் கச்சேரி; 'கர்நாடிக் சிம்ஃபொனி' எனப்படும் இந்திய மற்றும் மேற்கத்திய இசைகளின் கதம்பம்; 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' என்ற நாட்டிய நாடகம். மேடைக்கதை வடிவமைத்தவர் டாக்டர் வெங்கடேசன் ஸ்ரீனிவாசன், நாட்டியம் அமைத்து இயக்கியிருப்பவர் லலிதா ராமமூர்த்தி.

23ம் தேதியன்று 'க்ரியேடிவ் 2012' என்ற கருத்திலமைந்த நிகழ்ச்சிகள் வருமாறு: குரலிசை, நடனம், கருவியிசை ஆகியவற்றில் போட்டிகள்; பிரபல சங்கீத வித்வம்சினி பந்துல ரமா, எம்.எஸ்.என். மூர்த்தி, தஞ்சாவூர் முருகபூபதி ஆகியோருடன் வழங்கும் 'அன்னமய்யா' இசை நிகழ்ச்சி; சுசித்ரா பாலசுப்ரமணியன் வழங்கும் 'ஸ்ரீ ராம ஜய ராம' என்ற ஹரிகதை.

நான்காண்டுகளாக இந்தப் பள்ளி இந்தியக் கலைகளை அமெரிக்காவில் கற்பித்து வருவதோடு, வளரும் கலைஞர்கள் வெளிச்சத்துக்கு வரவும் உதவியுள்ளது. கடந்த நான்காண்டுகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் நடனம் மற்றும் இசை கற்றுத் தேர்ச்சி பெற நிதியுதவியும் செய்துள்ளது. 2012 மே மாதம் நடந்த 'மினியாபொலிஸ் கர்நாடிக் ஸ்டார் போட்டி' உட்படப் பல இந்திய மற்றும் பன்னாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் இதன் மாணவர்கள் வெற்றிகரமாகப் பங்கேற்றுள்ளனர். லலிதா ராமமூர்த்தி மற்றும் கே.என். சசிகிரண் ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்ட இந்தப் பள்ளிக்குத் தரப்படும் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு.

போட்டிகளில் பங்கேற்கவும், நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டுப் பெறவும்:
Lalitha Ramamoorthy, Director for School of World Music & Dance, 21884 Meridian Lane, Novi, MI. 48375 U.S.A.
தொலைபேசி: 248.347.4564, 248.767.4409,
மின்னஞ்சல்: natyadhwani@gmail.com; kreative2012@gmail.com.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com