நந்தனம்


சிங்கக்குட்டி படத்தில் நாயகனாக நடித்த சிவாஜி தேவ் கதாநாயகனாக நடிக்கும் படம் நந்தனம். இவர் சிவாஜியின் பேரன், நடிகர் ராம்குமாரின் மகன். நாயகியாக மித்ரா குரியன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் டி.வி. புகழ் ரிஷியும், தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ஏ.எல். அழகப்பனும் நடிக்கின்றனர். ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய என்.சி. சியாமளன் இயக்குகிறார். இசை: கோபி சுந்தர்.

அரவிந்த்

© TamilOnline.com