முதுமை
குழந்தையாய் இருந்தோம்
குறும்புகள் செய்தோம்
கூடி விளையாடினோம்
கூரை விழும்வரை

இளமை பசுமையானது
வாலிபம் வளமையானது
குடும்பம் சுமையானது
தாய்மை இனிப்பானது

கலிஃபோர்னியா கரம் நீட்ட
காலடி வைத்தனர் மக்கள்

கடமை முடிந்தது
அவகாசம் கிடைத்தது
சுவையான உணவு
சுற்றுலாப் பயணம்!

காலை நீட்டி கையை மடக்கி
கண்மூடிக் கவலையின்றி
ஒரு பொழுதாயினும் எமக்கு
ஒய்வு வேண்டும் இறைவா!

காலம் சொன்ன
கதையோ வேறு!
கருமுடியில் வெள்ளி
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை
உடலெங்கும் உபாதை
மனசெல்லாம் ஆசை
ஆதங்கம்தான் மிச்சம்.

கவலை வேண்டாம்
தூங்கி எழு
கதை வாசி கவிதை எழுது
பாடல் கேள் பத்திரிகை படி
தொலைக்காட்சி பார்
தொலைபேசியில் வம்பள
கையகலக் கணினியில்
உலகை வலம் வா

போதுமா இது?
வேண்டுமா இன்னும்?
தெரியவில்லை!

மேரி ராஜா

© TamilOnline.com