அதிபர் விருது பெறும் இந்தியர்கள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளருக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் அதிபர் விருதை (Presidential Early Career Award for Scientists and Engineers) வழங்கி கௌரவிக்கிறது. இந்த ஆண்டு விருது பெறும் 96 ஆராய்ச்சியாளர்களில் நான்கு அமெரிக்கா வாழ் இந்தியர்களும் உள்ளனர். மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த பிஜூ பரெக்கடன், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த பவன் சின்ஹா, பராக் ஏ. பாடக் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி வேதுல ஷர்மா ஆகிய நான்கு இந்திய அமெரி்க்கர்கள் இவ்விருது பெற்றுள்ளனர். இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருது இதுதான்.



© TamilOnline.com