செப்டம்பர் 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
1. அரியணை ஏறாத பாண்டியன் கலைத்திட்ட மெய்யற்ற வளத்தில் இழு (5)
4. சமமானது சேர்த்துவிடு (2)
6. உபரியான ஆதரவற்றவள் ஓடியதும் அஞ்சி பயமிலை குழப்புகிறாள் (4)
7. குரங்கின் தலையை உள்ளிட்டு அளித்த காரணத்தால் ஏற்றுக் கொள்ளும்படியானது (4)
9. கொத்தனார் வேலை செய்து உண்மையை மறைக்க முயல் (5)
12. அதிக சக்தி கொண்டது துடுப்பு போடு எதிர்வரும் துயரம் பாதி ஓடிவிடும் (4)
14. தன் வழியில்தான் கடவுளை அடைய முடியும் என்பவரின் முழுமையற்ற எதிர்வாதம் கொண்ட அறிவு? (4)
17. வீடு கட்டத் தேவைப்படும் மரத்தை வெட்டிய தருமனை.... (2)
18. ஒரு பறவை வதங்கி உள்ளே பானம் பருகிய மயக்கம் (5)

நெடுக்காக
1. இம்மிருகத்தின் மிகச் சிறிய அளவு (3)
2. ஒரு கொடி மலர் (5)
3. திருகாணி நடுவில் கழன்றுபோக அடை (2)
4. திட்டமிட்டு அடைய வேண்டிய இடம் மெய்மறப்பது எளிது (3)
5. சக்கரங்கள், நாலு கால்கள் துணையின்றிச் செல்பவன் (4)
7. தாய்நாடு பாரம் இறங்கிய குற்றம் தரையோடு செல் (3)
8. தரையோடு செல் பின்னர் மயக்கு நாட்டியக்காரி (4)
10. சில துளிகளைத் தவறவிடு ஆனால் அது கரைபுரண்டோடும் (3)
11. குறு. 7ல் இருப்பதின் மாற்றத்தோடு கடைசியாக வரும் இடையூறு (5)
13. பாலாறு ஓடும் வீடுகள் கொண்ட ஊரின் ஆறு (3)
15. ஏசி துயரம் போகும்படித் திரட்டியதும் கலக்கமடையும் (3)
16. ஜன்னலை அளித்தவர்கள் அரபிக்கடலோரம் இருந்த ஊர் (2)

வாஞ்சிநாதன்

ஆகஸ்டு 2012 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

© TamilOnline.com