புதுமுகங்கள் தேவை


சிவாஜிதேவ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'புதுமுகங்கள் தேவை'. இணை நாயகனாக ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பானு மற்றும் விஷ்ணுப்ரியா நடிக்கின்றனர். இவர்களுடன் ராஜ்கபூர், காதல் தண்டபாணி, எம்.எஸ். பாஸ்கர், கிரேன் மனோகர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதையை எஸ்.ஏ. அபிமான் எழுத வசனத்தை கவிதாபாரதி எழுதியிருக்கிறார். மலையாள மொழிப் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மனீஷ்பாபு இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழில் அறிமுகமாகிறார். இசை: ட்வின்ஸ் டியூன்ஸ்.

அரவிந்த்

© TamilOnline.com