கிருஷ்ணா டாக்கீஸ்


பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது வாங்கிய ஸ்ரீராம் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'கிருஷ்ணா டாக்கீஸ்'. கிராமத்து தரை டிக்கெட் இளைஞன் ஒருவன், எவ்வாறு படிப்படியாகத் தாமரை விருது பெறும் அளவுக்கு உயர்கிறான் என்பதே படத்தின் கதை. படத்தை ஸ்ரீராமின் தந்தை சிவராம கிருஷ்ணன் இயக்குகிறார். தாய் சரஸ்வதி தயாரிக்கிறார். நளினி, பெப்ஸி விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com