சுழல்


'ஹே ராம்', 'ரன்' உள்ளிட்ட படங்களில் வித்தியாசமாக நடித்துப் புகழ்பெற்றவர் அதுல் குல்கர்னி. இவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'சுழல்'. நாட்டின் பாதுகாப்பைச் சீர்குலைக்க சர்வதேசத் தீவிரவாத கும்பல் முயல்கிறது. அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தும் அதிரடி அதிகாரியாக வருகிறார் அதுல். இவருடன் மீனாள், பிரதாப் போத்தன், நிழல்கள் ரவி, காவேரி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிரடி, ஆக்‌ஷன், சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜெயின் ஆர். கிருஷ்ணா இயக்குகிறார். பிறைசூடன், சினேகன், யுகபாரதி ஆகியோர் பாடல்களை எழுத, எல்.வி. கணேசன் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com