சுட்டிப்பையனும் நான்கு திருடர்களும்


விஜய் டி.வி. ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் புகழ்பெற்ற சிறுவன் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் 'சுட்டிப்பையனும் நான்கு திருடர்களும்'. சுட்டிப் பையனாக ஸ்ரீகாந்த் நடிக்க, திருடர்களாக மகாநதி சங்கர், ரோபோ சங்கர், சுருளி மனோகர், கிங்காங் நடிக்கின்றனர். லொள்ளுசபா உதய் உள்ளிட்ட பல சின்னத்திரை நகைச்சுவைக் கலைஞர்கள் இப்படத்தின் மூலம் முதன்முதலாக வெள்ளித் திரைக்கு வருகின்றனர். கலகலப்பான இப்படத்திற்குத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜி. சிவா.

அரவிந்த்

© TamilOnline.com