ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம் 'ஐ'. கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், சுரேஷ் கோபி, ராம்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு: பி.சி.ஸ்ரீராம். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். வசனம்: சுபா. ஐ என்பதற்கு - ஐந்து, நான் என்ற பொருள்களோடு அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமான், நுண்மை, அம்பு, ஐயம் எனப் பல பொருள்கள் உள்ளனவாம். இவற்றின் கலவையாக இந்தப் படம் உருவாகி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. இது அரசியல் படம் அல்ல. ரொமான்ட்டிக் த்ரில்லர் என்கிறார் ஷங்கர். ஐ!

அரவிந்த்

© TamilOnline.com