ஆகஸ்டு 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
3. உள்ளேயிருப்பதைச் சொல்லும் பழங்கால நூல்கள் (5)
6. இரவில் படுக்குமிடம் இல்லாதபோதும் ஊர் மாறவில்லை (4)
7. அலுக்கும்படி நீண்டதை வெட்டி பொன்னியிடை சேர்ந்த பொன்னிநாடன் (4)
8. நெடுக்கு 1ல் இருப்பதையும் அதில் இரண்டில்லாததையும் உருவாக்குமிடம் (4,2)
13. பதவித் திமிர் (4,2)
14. மத்யமம் இன்றி கணினியால் அமைக்கப்பட்ட சம்பூரண ராகம்! (4)
15. சீராகத் தொடங்கிக் கவரி வீசிக் கவர்ந்துவிடு (4)
16. பின்னால் தாக்கிய கதை (2,3)

நெடுக்காக
1. பாதி மஞ்சம் முன் குலுங்க வந்த இனிமை? (5)
2. திருமணத்துக்கு உறுதியாக இது நடக்கும் (5)
4. தெய்வம் இருக்குமிடம் ஆரம்ப காலத்தில் எல்லோரும் இருந்தது (4)
5. அபகரித்து முதல் வணக்கம் வைத்துக் குனியும் பக்தர்கள் பார்ப்பது (4)
9. ஒரு பொழுது எப்போதோ பூக்கும் மெய் மெலிந்தது (3)
10. தலை வெட்டும் குணத்தவன் அசுவத்தாமனோ? (5)
11. பழக்கமில்லாதவர்கள் மத்தியில் அடை, பாதிப் பாதி பாயா, பூரி, கறி கலந்துவிடு (5)
12. வாயில் உபாதை வர இன்பவல்லி பாதி இன்னல் போக்கினாள் (4)
13. ஆடையைப் பூண்ட அந்த கணிகை இடையை வளை (4)

வாஞ்சிநாதன்

ஜூலை 2012 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

© TamilOnline.com