சர்க்கரைவள்ளி ஜாமூன்
தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளி - 1/2 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
மைதா - 2 தேக்கரண்டி
பால்பவுடர் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 6
கேசரி பவுடர் - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு
நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

கிழங்கை நன்றாக வேகவிட்டுத் தோல் உரித்து வைக்கவும். இதிலே மைதா மற்றும் பால் பெளடர் போட்டுப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். எண்ணெய்யை அடுப்பில் வைத்து நெய் விடவும்.

காய்ந்தவுடன் உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாய்ப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் கேசரிப் பெளடர், ஏலக்காய் போட்டு பாகாகச் செய்து கொண்டு அதில் உருண்டைகளைப் போடவும். பேஷான ருசியான சர்க்கரைவள்ளி ஜாமூன் தயார்.

****


இவையெல்லாம் தவிர சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாம்பார், வற்றல் குழம்பு, கூட்டுகள் இவற்றில் போடலாம். லேசாக துருவித் தேங்காய் சேர்த்து உளுத்தம்பருப்பு, மிளகாய், வறுத்துத் துவையல் செய்யலாம். வெறுமனே அடுப்பில் சுட்டுத் தோல் உரித்தும் சாப்பிடலாம்.

அடை தட்டும் போது அடைக்கு அரைக்கும் சாமான்களுடன் நாலைந்து துண்டுகள் சர்க்கரைவள்ளியைப் போட்டு அரைத்துத் தட்டிப் பாருங்கள். ம்ம்ம்... சுவையோ சுவை!

சுட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தோல் உரித்து சர்க்கரை, ஏலக்காய், நெய் சேர்த்து பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுங்கள். மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com