மீன்கொத்தி


தயாரிப்பாளரும், நடிகருமான அழகன் தமிழ்மணி தயாரிக்கும் புதிய படம் மீன்கொத்தி. இதில் நாயகனாக அழகன் தமிழ்மணியின் மகன் அஜய் கிரு நடிக்கிறார். நாயகியாக தெலுங்கில் புகழ்பெற்ற ஷோபனா நாயுடு நடிக்கிறார். கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, காதல் சுகுமார், நிகிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்களுக்கு தினா இசையமைக்க, மறைந்த இசையமைப்பாளர் சந்திரபோஸின் மகன் சந்தோஷ் போஸ் பின்னணி இசையைக் கவனிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படமான மீன்கொத்தியின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சஞ்சய் ராம்.

அரவிந்த்

© TamilOnline.com