சாம் கண்ணப்பன்
ஹூஸ்டன் வாழ் இந்தியத் தமிழர்களின் முன்னோடியான சாம் கண்ணப்பன் டெக்சாஸ் நிபுணத்துவ பொறியாளர்கள் வாரியத்தின் உறுப்பினராக (Texas Professional Engineering Board) நியமிக்கப்பட்டுள்ளார். சொக்கலிங்கம் 'சாம்' கண்ணப்பன், எட்வர்ட் சம்மர்ஸ் ஆகியோரை டெக்சாஸ் மாநில கவர்னர் ரிக் பெர்ரி, டெக்சாஸ் நிபுணத்துவப் பொறியாளர் வாரியத்திற்கு நியமித்துள்ளார். இந்த வாரியம் மேலும் ஐந்து வருடங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதி பெற்ற பொறியாளர் லைசன்சு வழங்குதல், டெக்சாஸ் பொறியியல் பயிற்சிச் சட்டம் உறுதி மற்றும் டெக்சாஸ் தொழில்முறைப் பொறியியல் நடைமுறைச் சட்டம் இயற்றல் ஆகிய பணிகளை இந்த வாரியம் செய்கிறது. தமிழ் நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிறந்த சாம், ஹூஸ்டன் SNC-Lavalin ஹைட்ரோகார்பன்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மூத்த வடிவமைப்புப் பொறியாளராக உள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் ஹூஸ்டன் ஸ்ரீ மீனாக்ஷி கோவிலின் முதன்மை நிறுவனர்களில் ஒருவராவார். பார்க்க: http://engineers.texas.gov/board_contact.htm

விஜயா ராமச்சந்திரன்,
ஹூஸ்டன், டெக்சாஸ்

© TamilOnline.com