சர்க்கரைவள்ளி வறுவல்
தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
எண்ணெய் - சிறிதளவு
உப்பு
பெருங்காயம்
காரப்பொடி

செய்முறை
கிழங்கை நன்றாகக் கழுவித் துடைத்து வறுவல் கட்டையில் சீவிக்கொள்ளவும். ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளவும். எண்ணெயை அடுப்பில் காய வைத்து, அதில் சீவிய கிழங்கைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து உப்பு, காரப்பொடி, பெருங்காயப்பொடி பிசிறிக் கலக்கவும். இது மிக ருசியான சிப்ஸ் ஆகும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com